search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு ஆஸ்பத்திரி"

    • ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்தனர்.
    • மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும், டாக்டர்களிடமும் தாங்கள் தனியார் தொண்டு நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஏதாவது பணம் தருமாறும் கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி பயிற்சி டாக்டர்களும், மருத்துவர்களும் பணம் கொடுத்ததாக தெரிகிறது. அந்த வகையில் ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்தனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் உண்மைதானா என்று ஆன்லைனில் டாக்டர்கள் சோதனை செய்தனர். அப்போது அது போலி தொண்டு நிறுவனம் என்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணையும், ஆணையும் மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட ஆண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பயிற்சி டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • கணவன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
    • அவரது உடலை கணவனின் வீட்டின் முன்பு புதைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பரசேரி பகத்சிங் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது35) கொத்தனார். இவரது மனைவி சுபா லட்சுமி(25). இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்பொ ழுது சுபாலட்சுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    அய்யப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுவந்தது. இந்தநிலையில் சுபாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தூங்கினார். இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து சுபாலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைய டுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். ஆனால் சுபாலட்சுமி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுபாலட்சுமி சாவிற்கு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் 2பேர் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் அவரது உடலை கணவனின் வீட்டின் முன்பு புதைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினா ர்கள். இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் உடலை பெற்று கொள்வதாக கூறினார்கள். பின்னர் சுபாலட்சுமி உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    • அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
    • ரூ.14 கோடியில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க பங்கர் என்ற கட்டிடம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகள் மற்றும் கட்டுமான அமைப்புகளை ஆய்வு செய்தார். தீவிர சிகிச்சை பிரிவு, முதுகு தண்டுவட பிரிவு, நரம்பியல் பிரிவு மற்றும் பங்கர் என்னும் புற்று நோய் கண்டறியும் மையம் அமைய இருக்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு அவர் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோருடன் 2 மணி நேரம் ஆய்வு செய்தேன். ஆஸ்பத்திரியில் 204 மருத்துவ பணியிடங்களில் தற்போது 193 மருத்துவர்கள் பணியில் உள்ளனர். 5 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளன.

    முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் மேலும் மருத்துவ உபகரணங்கள் வேண்டும் என கேட்டார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கான குளிர்சாதன வசதிகள் உள்பட பல உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான தானியங்கி ஆட்டோ கிளேவ் எந்திரம், துணிகளை உலர வைக்கும் எந்திரம் ரூ.75 லட்சத்தில் வாங்கி தரப்பட இருக்கிறது.

    நியூராலஜி பிளாக் பணிகள் ரூ.6.4 கோடியில் முடிந்துள்ளது. மிக விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கூடுதலாக 50 தானியங்கி மருத்துவ படுக்கை ரூ.23.75 கோடியில் அமைய உள்ளது. குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் ஆய்வு பணி மேற்கொண்ட போது இங்கு புற்றுநோய் தாக்கம் அதிகமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது அறிவித்த நிதி நிலை அறிக்கையில் கன்னியாகுமரி, திருப்பூர், ஈரோடு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் 30 வயதுக்கும் மேற்பட்ட மக்களுக்கு கர்ப்பப்பை, வாய், மார்பக புற்றுநோய் கண்டறியும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட இருக்கிறது.

    ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ரூ.14 கோடியில் புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம் அமைக்க பங்கர் என்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. இங்கு கதிரியக்க பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பங்கர் அமையும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்களில் வேலை நிறைவடையும். அதன் பின் டெலிகோபால்ட் என்ற கருவி அமைக்கப்பட உள்ளது. எனவே அடுத்த மாதம் புற்றுநோய் கண்டறியும் மையம் கட்டுமான பணிகளை நானே தொடங்கி வைக்க இருக்கிறேன். புற்று நோயானது முதல் கட்ட பரிசோதனையில் கண்டறிந்தால் எளிதில் காப்பாற்றலாம். 3, 4 நிலைகளை கடந்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வசதிகளும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்கப்பட்டு விட்டது. ஒரு மருத்துவரின் மனைவி பி.இ சிவில் படித்திருக்கிறார். இங்கு சிவில் தேவை இல்லை என்பதால் பணி வழங்கப்படாமல் உள்ளது. குமரி மாவட்டத்தில் எலிக்கடிக்கு, நாய் கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் கொடுத்த டிஸ்சார்ஜ் சம்மரியில் குழந்தைக்கு நாய் கடித்ததாக பதிவு இருந்தது. பாதுகாப்புக்காக நாய்க்கடி மருந்து செலுத்தினர். அதன்பிறகு கேரளாவில் தனியார் மருத்துமனையில் இல்லாத நாய் கடிக்கு சிகிச்சை அளித்ததாக அங்குள்ள மருத்துவரையும், அந்த மருத்துவமனையையும் புரமோட் செய்வதற்காக ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் அந்த தகவலை பரப்பினர். அந்த செய்தியை பார்த்துவிட்டு எதிர்கட்சி தலைவர் வேலை மெனக்கெட்டு அறிக்கை விட்டார். தனியார் மருத்துவமனை தவறு செய்திருக்கிறது.

    அந்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கேரள சுகாதாரத்துறையிடமும் தெரிவித்துள்ளோம். அதற்கு நான் பதிலும் கொடுத்துவிட்டேன். அனைத்து ஆரம்பசுகாதார நிலையங்களிலும் பாம்புகடி, நாய்க்கடிக்கான மருந்துகள் இருக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2½ ஆண்டுகளாக நாய்க்கடி, பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ், சூப்பிரண்டு அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிடம் மருத்துவர்கள் ரெனிமோள், விஜயலட்சுமி மற்றும் பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • சுகாதாரமான முறையில் பராமரிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் ஏராளமானோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவது மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைகள் உட்பட பலதரப்பட்ட மக்கள் செங்கம் அரசு மருத்து வமனைக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் செங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனை ஆய்வகம் அருகே உள்ள கழிவறையிலிருந்து கழிவு நீர் வெளியேறி ஆய்வகம் வரை தேங்கியுள்ளதாக சமூக ஆர்வலர் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் ரத்த பரிசோதனை செய்ய ஆய்வகத்திற்கு வருபவர்கள் தேங்கியுள்ள கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவறையில் இருந்து கழிவு நீர் வெளியேறியதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அங்கு ஆய்வகத்தின் அருகே கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடுகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

    மேலும் செங்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சுகாதார சீர்கேடுகள் குறித்து புகார்கள் பொதுமக்கள் கூறும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக தலையிட்டு செங்கம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து நடவடிக்கை வேண்டும்.

    போதுமான துப்புரவு பணியாளர்களை கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளவும், கழிவறைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் செங்கம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேசிய தரச் சான்று குழுவினர் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம், அரசு மருத்துவமனையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் என 3 கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் குமாரபாளையம் அரசு மருத்துவமனை பல அளவுகோல்களில் சிறப்பிடம் பெற்று தேசிய தரச்சான்று கிடைக்கப்பெற்றுள்ளது.

    இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:-

    குமாரபாளையம், அரசு மருத்துவமனையில் 3 கட்டங்களாக தேசிய தரச் சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. இதன் பலனாக தற்போது தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது.

    மாவட்ட அளவில் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அடுத்து குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு இது கிடைத்துள்ளது.

    இதேபோல் லட்சயா திட்டத்தின் கீழ் மகப்பேறு அறை, அறுவை சிகிச்சை அறை ஆகியன ஆய்வு செய்யப்பட்டது. அதிலும் 95 மதிப்பெண்கள் கிடைக்கப்பெற்று, சுகாதார அமைச்சர் சுப்ரமணியம், சுகாதாரத்துறை இயக்குனர் கதன்தீப்சிங், லட்சயா திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தி உள்ளனர்.

    இந்த விருதுகள் பெற காரணமாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியா ளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தேசிய தரச்சான்று பெற்றதன் பலனாக அதிக படுக்கை வசதிகள், அதிக டாக்டர்கள், அதிக செவிலியர்கள், அதிக பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தசைப்பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார்.
    • தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ்- ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். ஒருகட்டத்தில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் உடலில் அசைவு இருப்பது தெரிய வந்த நிலையில், உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக செய்திகள் தெரிவித்தன.

    கேரளாவில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குண்டான சிகிச்சைகளை துரித நிலையில் மேற்கொண்டதன் காரணமாக, குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி, தற்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் தாய் ஷைனி தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன.

    தசைப்பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார். சிறு குழந்தையின் கை தவறான சிகிச்சையால் அகற்றப்பட்டு, தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை. ஆனால், சுகாதாரத்துறை மந்திரிக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த திமுக அரசின் சுகாதாரத்துறை மந்திரி, மக்கள் நலன் காக்கும் மந்திரியா? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மந்திரியா? என்பதே சந்தேகமாக உள்ளது.

    தமிழகத்தின் தலையெழுத்து, முதலமைச்சரின் மகன் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளையாட்டுப் பயிற்சியாளராக வலம் வந்து துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள்.

    அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்த் தன்மை குறித்து பரிசோதிக்காமல் கவனக் குறைவாக கையில் கிடைத்த மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவது மிகவும் கொடுமையானதாகும். இதுபோன்ற தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது, சுகாதாரத் துறை மந்திரி, அவரது துறையில் முழு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர்.
    • மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார்.

    விக்கிரவாண்டி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராதிகா (வயது 28). கர்ப்பிணியான இவருக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரில ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த 5-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    குழந்தையின் கையில் வழக்கத்தைவிட தசை அதிகமாக இருந்ததால், குழந்தைகள் வார்டிற்கு தாய் மற்றும் சேயை மாற்றினர். அங்கிருந்த அனைத்து படுக்கையிலும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் ராதிகா மற்றும் அவரது குழந்தைக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து தாயும், சேயும் வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி பதில் அளித்தார். இது தொடர்பாக இருவருக்குமிடையே டுவிட்டரில் கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்றது.

    இந்நிலையில், வராண்டாவில் தரையில் படுத்து சிகிச்சை பெற்று வந்த ராதிகா மற்றும் அவரது குழந்தைக்குக்கு தனி அறை ஒதுக்கிடு செய்ய மருத்துவக்கல்லூரி முதல்வர் கீதாஞ்சலி உத்தரவிட்டார். அதன்பேரில் மருத்துவ அலுவலர் ரவிக்குமார் சிறப்பு சிகிச்சைக்கான தனி அறை ஓதுக்கினார். அங்கு குழந்தைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அரசு மருத்துவமனைக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் முககவசத்திற்கு பதிலாக டீ கப் பயன்படுத்தியது அறிந்து அதிர்ச்சியுற்றேன்
    • ஏழை, எளிய மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கையும், உத்தரவாதத்தையும் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் வழங்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு ஆக்சிஜன் முகக்கவசத்திற்கு பதிலாக டீ கப் பயன்படுத்தியது அறிந்து அதிர்ச்சியுற்றேன். தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அரசு மருத்துவனையை நாடும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரும் உத்தரவாதம் இதுதானா?.

    தமிழக அரசும், சுகாதாரத்துறையும் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட அரசு மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளிலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், மருந்துகளையும் தங்குதடையின்றி வழங்கி முன்னரே இருப்பு வைக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் அச்சமின்றி அரசு மருத்துவமனையை அணுக உரிய நம்பிக்கையும், உத்தரவாதத்தையும் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றியபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை

    குளச்சல், ஜூலை.20-

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் வந்தார். சிகிச்சைக்கு வந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனை தொடர்ந்து டாக்டர்கள், சிகிச்சை அளித்தபோது குழந்தை பெற்ற பெண்ணுக்கு 17 வயதே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமியிடம் விசாரித்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரள் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றியபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து அவர், சிறுமியை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி உள்ளார். இதில் தான் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக மருத்துவமனை போலீசார், குளச்சல் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை கர்ப்பமாக்கியது தொடர்பாக அவரது தாயாரிடம் புகார் பெற்று மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

    • ஆய்வுக்கு பிறகு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு உறுதி
    • மாணவர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் பொதுமக்களால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் குமரி மாவட்டம் வந்தனர்.

    குழுவின் தலைவர் அன்பழகன் தலைமையில் கலெக்டர் ஸ்ரீதர் முன்னிலையில் கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மணக்குடி பகுதியிலும் இந்த குழுவினர் ஆய்வு நடத்தினார்கள். இன்று 2-வது நாளாக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குழு தலைவர் அன்பழகன் தலைமையில் உறுப்பினர்கள் காந்தி ராஜன், சந்திரன், சிந்தனை செல்வன், சிவகுமார், சேவூர் ராமச்சந்திரன், தளபதி, நாகை மாலி, பரந்தாமன், பூமிநாதன், ஓ.எஸ்.மணியன், ராஜேஷ் குமார் ஆகியோர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    காசநோய் பிரிவிற்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தனர். ரத்த சேமிப்பு கிடங்கையும் சென்று இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு எத்தனை யூனிட் ரத்தம் இருப்பு உள்ளது, மாதம் எவ்வளவு ரத்தம் யூனிட் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்ற விவரங்களை கேட்டறிந்தனர். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கொட்டாரம் அரசு பள்ளியில் ஆய்வு செய்த போது, மாணவர்கள் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை விளையாட்டு மைதானத்திற்கு பயன்படுத்த ஆவண செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கீழமனக்குடி, மேலமனக்குடி பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கன்னியாகுமரி பகுதியில் தூண்டிவளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பசுமை தீர்ப்பாயம் தீர்ப்புக்கு உட்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.17 கோடி செலவில் மாணவ-மாணவிகள் விடுதி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி முடியும் தருவாயில் உள்ளது. இதேபோல் நீரோ சிகிச்சை மையம் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். ஆஸ்பத்திரியில் சில குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். அந்த குறைபாடுகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது கலெக்டர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., ஆணையாளர் ஆனந்த மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதை தொடர்ந்து சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அந்த குழுவினரிடம் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மனு ஒன்றை அளித்தார். கன்னியாகுமரி மற்றும் வாவத்துறை பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.

    • நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்
    • அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது அரசு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • டாக்டர் மீது தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரது செல்போன் போலீசாரிடம் சிக்கியது.
    • அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிபவர் ஹரிஷ் முகமது. நேற்று இவர், வழக்கம்போல் பணியில் இருந்தார்.

    அந்த மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்க ஜோஸ்னீல், ரோசன் ராபின் ஆகியோர் வந்தனர். பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவரை கேலி செய்துள்ளனர். மேலும் அவரிடம் தவறாக நடக்க முயன்று தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதனை பணியில் இருந்த ஹரிஷ் பார்த்து, அவர்கள் இருவரையும் தட்டிக் கேட்டார். அதில் ஆத்திரம் அடைந்த இருவரும் டாக்டர் ஹரிசை சரமாரியாக தாக்கினர். அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் டாக்டர் ஹரிஷ் காயம் அடைந்தார்.

    அவர், அதே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர் மீது தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரது செல்போன் போலீசாரிடம் சிக்கியது.

    அதனை வைத்து டாக்டரை தாக்கிய இருவரையும் போலீசார் அடையாளம் கண்டனர். ஜோஸ்னீல், ரோசன் ராபின் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்தனர். தேசிய மருத்துவர் தினமான நேற்று அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×